![](http://4.bp.blogspot.com/-R-4ajZUVsMw/UxbSchut6JI/AAAAAAAABJc/489_1nH7-bA/s320/Dr.S.Siwamohan.jpg)
சேகுரா தனது புனைபெயரான இராஜபறவை என குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கும் கருத்துக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் என்.கந்தவரதன் கருத்துத் தெரிவிக்கையில் மாகாணசபையில் இருக்கும் சிவமோகன் தனது சபைத் தலைவரை தனது பிரத்தியேக செயலாளரை கொண்டு விமர்சிப்பது மிகவும் கீழ்தரமான செயல். கடந்த மாகாணசபை அமர்வில் கூட வடமாகாணசபை முதலமைச்சரின் செயலாளர் அங்கஜனுடன் சிவமோகன் வம்பு இழுத்திருந்தார்.
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களைப் பற்றி மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். எமது இணையம் இது தொடர்பில் ஆய்வு செய்ததில் சிக்கியவை இவை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சிவமோகன் அங்கு மக்களுடன் நிற்பதை விட வவுனியாவில் தங்கி நிற்பதே அதிகம் எனவும் தற்போது கூட்டமைப்பை பிளவு படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவும் தெரியவருகிறது.
சிவமோகனின் பிரத்தியேக செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு
எல்லோரிடமும் இரகசியங்கள் உண்டு. ஒரு சிலர் தம் வாழ்க்கை காலத்தில் அவற்றை வெளிப்படுத்தாமலேயே இருந்து விட்டு இறந்து போகிறார்கள். (காலம் கடந்தும் இந்த வகை இரகசியங்களின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதில்லை. அவை தொடர்பில் ஆர்வமுடைய மறுசாராரால் நித்தமும் ஊகங்களே வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.)
இன்னும் சிலரோ. அவற்றை அந்தந்த நிமிசமே போட்டுடைத்து விடுகிறார்கள். (இந்த வகை இரகசியங்கள் பரபரப்பை கிளப்புவதும் உண்டு, சிலவேளைகளில் பிசுபிசுத்துப்போவதும் உண்டு.)
இன்னும் ஒருவகையினர் அவற்றை காலம் தாழ்த்தியே வெளியிடுகிறார்கள். (இந்த வகை இரகசியங்கள் காலச்சூழலுடன் பொருத்தி வெளியிடப்படும் போது, குறித்த சூழலை அல்லது சம்பவத்தை மெய்ப்பிப்பதாக அவற்றுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அவை அமைந்து விடுகின்றன. இராணுவ துறை சார்ந்தும், அந்தரங்கம் சார்ந்தும் இப்படி பல இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டதுமுண்டு. சம்பந்தப்பட்ட நபராலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு ஒரு நபராலோ புத்தகங்கள் கூட எழுதப்பட்டதுமுண்டு.)
இதில் விக்னேஸ்வரன் எந்த ரகம்? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் க.வி.விக்னேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களை இரண்டாவது தடவையாக கடந்த 26.01.2014 அன்று சந்தித்து பேசியிருந்தார்.
இந்தச்சந்திப்பு நாளைய (27.01.2014) பேரவை அமர்வில் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகளின் கடுமையை குறைப்பது தணிக்கை செய்வது நீக்குவது பற்றி வலியுறுத்துவதற்காகவே கூட்டப்பட்டது.
இதன்போது உறுப்பினர் சிவாஜிலிங்கம் 'இலங்கையில் நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை என்பதை சர்வதேசத்துக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.'எனும் பிரேரணையை நாளைய பேரவை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறியதற்கு
'சுமந்திரன் சொன்னது இனப்படுகொலை என்ற சொல்லை இனி ஒருபோதும் use பண்ண வேண்டாம் என்று. ஏனெண்டா புலிகளும் போர்க்குற்றத்தில ஈடுபட்டிருக்கினறார்கள். அதப்பத்தி இப்ப கதைக்கப்போனா புலிகள் தரப்பு குற்றங்கள், மீறல்கள் தொடர்பில பதிலளிக்க வேண்டி வரும். அப்படின்னா யார் பதிலளிக்கிறது. இப்படியான பிரேரணைகள் அரசுடன் முரண்பாட்டையே உருவாக்கும். இத்தகைய கடும்போக்குகள் மேலும் முரண்பாடுகளையே வளர்க்க உதவும். அதால பிரேரணைகளில திருத்தங்கள செய்ய வேணும்.'என்று விக்னேஸ்வரன் கூறினார்.
சுமந்திரன் சம்பந்தன் இருவரை மட்டும் தவிர கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் அகம் புலம் தமிழகம் என்று பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை.சேனாதிராசாவை நிறுத்துவதிலேயே ஆர்வமும், முனைப்பும் கொண்டிருந்ததை நீங்கள் யாவரும் அறிந்ததே.
எனவே சுமந்திரன், அரசியலுக்குள் விக்னேஸ்வரனை இழுத்துக்கொண்டு வர முன்னரே, இதை விக்னேஸ்வரனிடம் கூறினாரா? இல்லை எங்கே? எப்போது? எச்சந்தர்ப்பத்தில் இப்படி வகுப்பெடுத்தார்? என்பது விக்னேஸ்வரன் சுமந்திரன் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்!
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-(இ)ராஜபறவை-
இலங்கை நெற்றுக்காக முல்லையில் இருந்து கருநாகம்