ஜெனீவா பிரச்சினை அரசாங்கம் வாங்கிக் கட்டிக் கொண்ட பிரச்சினையே…
ஐதேக சொன்னபடி செய்திருந்தால் அரசாங்கம் இன்று ஜெனீவா பிரச்சினைக்கு இந்தளவு பாரதூரமான முறையில் முகங் கொடுத்திருக்காது என ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகிறார்.
“அரசாங்கத்திலுள்ள அரைபடித்த பண்டிதர்கள்தான் ஜெனீவா பிரச்சினையை பூதகரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் சர்வதேசத்திற்கு பெரிதாக பொய் வாக்குறுதிகள் அளித்தன. ஆயினும், அவற்றை நிறைவேற்றாமல் பாராமுகமாக இருந்துவிட்டன. குறைந்தளவு கற்றறிந்த பாடம் ஆணைக்குழு குறிப்பிட்டவை பற்றியேனும் கருத்திற் கொள்ளவில்லை.
சர்வதேசம் எங்கள் நாட்டுக்கு விரல் நீட்டுவதற்கு மூல காரணம் அரச மட்ட பெரிசுகள்தான். அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி சரிவர தெரியாமையே இதற்குக் காரணம்.
சனல்-4 பிரச்சினை மேலெழுந்தபோது, அரசாங்கம் உடனடியாக அதற்கெதிராக நீதிமன்ற தீர்மானமொன்றை எடுத்திருக்கலாம். பொறுப்புச் சொல்லவேண்டிய எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் நாங்கள் சொன்னோம். இது பற்றி கருத்திற் கொள்ளாதவிட்டால், எங்களுக்கு அந்தப் பொறுப்பை வழங்குமாறு சொன்னோம். நாங்கள் நீதிமன்ற செயற்படுகளை மேற்கொள்வோம் என.
ஆயினும், யாரும் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அன்று நல்லதொரு முடிவு எடுத்திருந்தால், இன்று இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது. இது தேடிப் பெற்ற பிரச்சினை. இப்போது ஜெனீவா பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் குழம்பிப் போயுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)