பிரிட்டனைச் சேர்ந்த லொரென் மொரிஸ் எனும் 21 வயதான யுவதியொருவர் 16 வயதானவராக இருந்தபோது முதல் 8 வயது சிறுவனுடன் 50 தடவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சிறுவனுடைய 8 வயது முதல் 10 வயதாகும்வரை 50 தடவைகள் லொரென் மொரிஸ் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக மேற்படி யுவதி உள்ளார்.
அதேவேளை குறித்த சிறுவனுக்கு தற்போது 14 வயதாகிறது என்பதுடன் மேற்படி யுவதியின் செயற்பாடுகள் குறித்து பாடசாலையில் அச்சிறுவன் மற்றவர்களிடம் தெரிவித்ததையடுத்தே குறித்த விடயம் அண்மையில் அம்பலமாகியதை யடுத்து கடந்த வருடம் மார்ச் மாதம் தாம் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வோர்செஸ்டர் நீதிமன்றில் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் லொரென் மொரிஸுக்கு நீதிபதி இரு வருடகால சிறைத்தண்டனை விதித்தார்.