கந்தளாய் கல்வி வலயத்திலுள்ள சேருநுவர பிரதேச பாடசாலையொன்றின் அதிபரான பௌத்த தேரர் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பாயிஸ் ரஸாக் உத்தரவிட்டார்.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் தற்போது சேருநுவர பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கடடையாற்றுபவரான 30 வயது பிக்குவே இவ்வாறு விளக்க மறியளில் வைக்கப்பட்டுள்ளார்.
சேருநுவர சிறிமல்புர பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் இந்த மாணவி அதே பகுதியிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு இரு மாணவிகளுடன் திரும்பி வரும் போது அதே முச்சக்கரவண்டியி்ல் வந்த இந்த பௌத்த பிக்கு இம் மாணவியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயத்தை மாணவி பாடசாலை ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்ததை அடுத்தே குறித்த சம்பவம் வெளியே பரவியுள்ளதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து நுவர பொலிஸார் பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.
...............................