சிறைச்சாலையிலிருந்தே சிறைத் கைதிகள் தமது வீட்டாருடன் நிலையான தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நடைமுறையொன்றை எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் வெலிகட சிறைச்சாலையில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களில் சிறைக் கைதிகள் தமது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுடன் இதன் முதற்கட்டமாக வெலிகட சிறைச்சாலையிலுள்ள 3000 கைதிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கைதி மாதமொன்றுக்கு நான்கு முறை மாத்திரமே தொலைபேசியைப் பயன்படுத்த முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சத்திரரத்ன பல்லேகம தெரிவித்ததுடன் இந்த நடவடிக்கை படிப்படியாக ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.