![](http://1.bp.blogspot.com/-Tp1bjlZIQbI/UyvaY0jZd9I/AAAAAAAAXFo/ocnuPiHXRhE/s320/Australiya.jpg)
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இலங்கையின் கள நிலவரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அவுஸ்திரேலியா இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.