காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு நேற்று காலை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
நேற்று ஆரம்பமான ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் 22ஆம்திகதி வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
நேற்றைய அமர்வில், ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம , ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
இந்த அமர்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.