கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்குவதற்கு தீர்மானித்தது ஐதேக ஆட்சிக் காலத்திலேயே என ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயவடனகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“ஐக்கிய தேசிய கட்சி 1990-91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை மற்றும் தெற்கு அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டது. 5 ஆண்டுகளில் பூர்த்தி செய்யமுடியுமாக இருந்த அவ் அபிவிருத்தித் திட்டம் 1994 ஆம் ஆண்டுக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 ஆண்டுகளில் பூர்த்தி செய்ததனால் இவ்வாறு குறிப்பிடுகிறது. முன்னணி அரசாங்கம் இந்தப் பாதையை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்த தொகையை விடவும் இருமடங்காகியுள்ளது.
அதேபோல, பாதையை விரிவாக்கி நாட்டை சிறிதாக்கியது போல, மக்களின் வயிறுகளையும் சிறிதாக்கியுள்ளது. பாலியல் வல்லுறவை அதிகரித்துள்ளதுடன் அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள் மூலமும் அரசாங்கம் வயிறு வளர்த்துள்ளது.
சென்ற இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் நாங்கள் யாரும் சிந்திக்காத முறையில், வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. விலை குறைந்த ஒன்றிரண்டு பொருட்களின் பெயர்களை நீங்கள் முடியுமென்றால் குறிப்பிடுங்கள் என நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)