Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

குருநாகலில் 2 பொலிஸாரை கடத்தி கொலை செய்யதது இவர்கள் தான்! தகவல் வழங்கினால் 10 இலட்சம்ரூபா சன்மானம்!

$
0
0
குருநாகலில் 2 பொலிஸ் கான்ஸ்டபில்களை கடத்திச் சென்று ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 2 சிசிரிவி காட்சிகளும் புகைப்படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

சரியான தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம்ரூபா சன்மானம் வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் 4 பேர் தொடர்புபட்டிருக்கலாமென நாம் நம்புகின்றோம். அவர்களில் ஒருவர் முக கவசம் இன்றி வருகை தந்துள்ளார். அவருடைய புகைப்படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் எமக்கு அறிவியுங்கள். இது போன்றதொரு வேன் வேவல்தெனிய பகுதிக்கு வருகை தந்துள்ளது.

வேன் ஒன்று கடத்தப்பட்டிருந்தால் அல்லது வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தால் இது பற்றி அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஒருவர் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையம் ஒன்றுக்கு சென்று வாகனம் ஒன்றை வாடகைக்கு கேட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு வாடகைக்கு கேட்டுள்ளார். வாகன அனுமதி பத்திரத்தை அவரிடம் கேட்;டப்போது அவர் போலியான அனுமதி பத்திரத்தை வழங்கியுள்ளார்.

அந்த வாகன அனுமதி பத்திரத்திலுள்ள நபர் தொடர்பான்கள் தெரிந்தால் எமக்கு அறிவியுங்கள். குறித்த நபர் தொடர்பாகவோ குறித்த வேன் தொடர்பாகவும் தகவல்கள் அறிந்து வைத்திருந்தால் இந்த வாகன அனுமதி பத்திரத்தை வைத்திருந்தவர் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தால் 0772659336 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க முடியும். இது தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சண்மானமாக வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>