தேசிய அடையாள அட்டையை வழங்கி கையடக்கத் தொலைபேசிக்கான இணைப்பினைப் பெறும்போது, அவ்விபரங்களையும், முகவரியையும் திருடி வேறு படங்களை இணைத்து போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, குற்றவாளிகள் வெவ்வேறு குற்றச் செயல்களைப் புரிந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி குற்றச் செயல்களைச் செய்துவிட்டு, குற்றவாளிகள் அவ்விடத்திலேயே விட்டுச் செல்கின்றனர். அதனால் அடையாள அட்டைக்குச் சொந்தக்காரங்கள் பெரும்பாலும் பொலிஸாரால் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. நீதிமன்றில் நிறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதனால் தொலைபேசிக்கான இணைப்புக்களை கொள்வனவு செய்யும்போது, மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.
(கேஎப்)