பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் வலு வான அரசு ஆட்சிக்கு வந்திருப்பதால் இந்திய இலங்கை உறவுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்ற நிகழ்ச்சிக்கே இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 'சார்க்'நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்த விதம் புதிய இந்திய அரசின் வலிமையையும் 'சார்க்'நாடுகளுடனானஉறவை வலுவடைய செய்யும் நிலையையும் பறைசாற்றியது.
இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போது ஆளும் அரசுகளுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது. எனவே, அவர்களுடைய முடிவுகளுக்கு வலுவான எதிர்ப்புக்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், வலுவான இரண்டு அரசுகளின் நட்புறவு ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கே வழிவகுக்க வேண்டும்; என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி இதேபோல அறுதிப்பெரும் பான்மை பெற்று இந்தியாவில் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தன மிகுந்த அரசியல் வலிமையுடன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை-இந்திய உடன் படிக்கையை நிறைவேற்றுவதில் பெருத்த தோல்வியே ஏற்பட்டது.
இலங்கையில் அரசாங்கத்தின் நிலைத்தன்மையும் மக்கள் ஆதரவும் வலுவான நிலையில் இருக்கின்றது, அபிவிருந்தி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. சர்ச்சையில் உள்ள 13-வது சட்ட திருத்தத்தை அமுல்படுத்துமாறு ராஜபக்ஷ அரசை மோடி அரசால் வலியுறுத்த முடியுமா என்பது அடுத்த கேள்வி
இறுதியாக, மோடி அரசு புதிய தாராளமயக் கொள்கை அடிப்படையிலான சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட முயற்சிக்கப்போகிறது. அதன் விளைவுகள் இலங்கையிலும் எதிரொலிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை