ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலையில் ஒன்றில் பணிப்புரியும் 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, அவரை ஒரு முச்சக்கரவண்டியில் நோர்வூட் கோர்த்தி பகுதிக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து தங்க நகைகளை பறித்து, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று இரவு 11.00 மணியளவில் கோர்த்தி பகுதியில் வசிக்கும் அரச உத்தியோத்தர் ஒருவருக்கு இச்சம்பவம் பற்றி தெரிவித்த பின் மேற்படி அதிகாரி நோர்வூட் பொலிஸாருக்கு முறைபாடு செய்துள்ளார். இதன்பின் நோர்வட் பொலிஸர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஒரு பத்திரிகையில் இருந்த திருமண அறிவித்தல் படி சந்தேகநபரிடம் 10 நாட்களாக தொடர்பு இருந்ததாகவும் நேற்று சந்தேகநபர் தன்னை சந்திக்க வேண்டும் என தெரிவித்தபோது மாலை 4.30 மணியளவில் ஹட்டன் நகரில் வைத்து சந்தித்ததாகவும் அதன் பின் சந்தேக நபர் முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்ததாகவும் அதன் பின் தானக்கு என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்ணின் முறைபாடு சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதித்திருக்கும் பெண்ணை நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.