![]()
கொழும்பு இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
26, 21 மற்றும் 20 வயதான யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.