![](http://2.bp.blogspot.com/-0l-q65Pv_fE/U47zBUOpvZI/AAAAAAAAYOA/mQmaifRkc94/s320/dilan.jpg)
இத்தாலியில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான பட்டியலில் பெயரை உட்படுத்துவதாகவும் தென் கொரியாவுக்கு அனுப்புவதாகவும் கூறி இப்பெண் பணமோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளரினால் தாம் ஏமாற்றப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு செய்த முறைப் பாட்டையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவின் பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் விசாரணை களை ஆரம்பித்தனர்.
பணியகத்தின் சட்டப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கீர்த்தி முத்து குமாரணவின் ஆலோசனைக்கமைய பதுளையில் வைத்து இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பசறை வீதியில் தற்காலிக வீடொன்றில் வகித்து வந்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற சந்தேக நபரான பெண் அமைச்சிலோ, அல்லது அமைச்சரின் அலுவலகத் திலோ, பணியகத்திலோ எந்தவித பதவியையும் பெறவில்லை. அங்கு தொழில் புரிபவரும் அல்ல, என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
வெளிநாடு செல்வதற்காக குறித்த தனுரா நவமி ராஜபக்ஷ என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் இருப்பின் உடனடியாக பணி யகத்தின் சட்டப்பிரிவின் 011-2864118 அல்லது 24 மணி நேரமும் தொழிற்படும் 011-2879900/ 0112879901/ 011-2879902 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் பணியகம் கேட்டுக் கொள்கிறது.