கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து ஊடகங் களிடம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கோல்சேஸ்டர் ( Colchester) பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான லோரன் ஸ்மித் என்ற பிரித்தானிய யுவதி, கல்கிஸ்சையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்ததுடன் நேற்று முன்தினம் அதிகாலை 6.30 அளவில் வெளியில் சென்றுள்ளார்.
கடைக்கு செல்வதாக கூறியே அவர் வெளியில் சென்றுள்ளார். எனினும் அவர் மீண்டும் ஹொட்டலுக்கு திரும்பவில்லை என தெரியவருகிறது. பணம் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை ஹொட்டலில் வைத்து விட்டே அவர் வெளியில் சென்றுள்ளார். காணாமல் போயுள்ள பிரித்தானிய யுவதியை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் அவர் எங்கிருக்கின்றார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.