
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று தொழில் வாய்ப்பின்றி பெருமளவான தமிழ் இளைஞர், யுவதிகள் அல்லலுறுவதாக பலர் தெரிவிக் கின்றனர். அவ்வாறானவர்களை இராணுவத்தில் இணைத்து தொழில் வாய்ப்பினை வழங்கி சமூகத்தில் நற்பிரஜையாக மாற்ற அரசு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
இருப்பினும் பல பெற்றோர் இதனை தடுத்து வருவது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்றார். யுத்தகாலத்தின் பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு விவசாய அமைச்சு ஊடாக காணிகளை வழங்குவதுடன் ஏனைய உதவிகளையும் வழங்கி இராணுவத்தினரின் கண்காணிப்போடும் ஆலோசனையோடும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மாவட்ட மட்டத்தில் இளைஞர்களு க்கிடையே கிரிக்கெட் போட்டி நடாத்துதல் சமயஸ்தலங்களின் மூலமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தி நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்கல், பாடசாலை மாணவர்களில் சிறந்த வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கான பயிற்சியை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் நாட்டிற்கு தேவையான நற்பிரஜைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
இறுதியாக சென்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பிரதேச செயலக ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் சர்வ மதக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஒன்றாக கூடி சகலவிதமான பிரச்சி னைகளும் பேசித்தீர்க்கப்பட வேண்டுமென்றார். அத்தோடு சங்கமன் கண்டி மலைக்கோவில் வழிபாடுகள் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்பட்டு ள்ளதாகவும் கூறி முடித்தார்.