தமது கட்சிக்கு அரசாங்கத்துடன் கொள்கை ரீதியான பிரச்சினைகள் இருக்கின்ற போதும், அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்குரிய எண்ணப்பாடே இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவிக்கின்றார்.
சிலவேளைகளில் அரசாங்கத்துடன் பிரச்சினைகள் ஏற்பட்ட போதும், அப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வேண்டிய இடங்களில் தீர்த்துக் கொள்ளவே முஸ்லிம் காங்கிரஸ் ஆவன செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை கொழும்பில் நடைபெறவிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டின்போதும் அரசாங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியோ, பிரச்சினைகள் தொடர்பான ஏனைய விடயங்கள் பற்றியோ எதுவும் பேசப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)