அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தன்னுடன் கோபமாக இருப்பது தேவதன்த புத்த பெருமானுக்கு கோபமாக இருந்தது போன்றதாகும் என பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா குறிப்பிடுகிறார்.
தனக்கும் ஜனக்க பண்டாரவுக்கும் இடையே உள்ள பிளவு தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அது சரியாக புத்த பெருமானும் தேவதன்தவுக்குமிடையே இருந்த ஜன்மப் பகையாகும். புத்தபெருமானுமானுடன் தேவதன்த குரோதமாக இருந்தது போலவே ஜனக்க என்னுடன் குரோதமாக இருக்கின்றார். அரசியல் சாக்கடை நிலவிய மாத்தளை நகரில் சிறந்ததொரு அரசியல் மாற்றத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். அதனைப் பொறுக்கவியலாமல்தான் ஜனக்க என்மீது குற்றம் சுமத்துகின்றார். முன்னரைப் போல கப்பம் எடுக்கும், போதைப் பொருள் விற்பனை செய்யும், கட்சி உறுப்பினர்களைத் தாக்கும் அரசியல் கலாச்சாரம் மாத்தளையில் இல்லை. நாங்கள் எல்லோரும் மாறியுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)