இலங்கையில் பல இடங்களில் உள்ள வாகனங்களை வாடகைகளுக்கு வாங்கி அந்த வாகனத்தில் இருக்கும் வாகன இலக்கத்தையும் (என்ஜீன்) இலக்கத்தையும் மாற்றி விற்பனை செய்த 5 பேரை ஹட்டன் பொலிஸார் நேற்று (13)கைது செய்தனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள (டொல்பீன்) வேன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்கு எடுத்து இலக்கத்தை மாற்றி 13 இலட்சத்திற்கு மகியங்கனை பகுதிக்கு விற்பனை செய்திருந்தபோது ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேற்படி வேனையும் சந்தேகத்தின் பேரில் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபர்கள் கண்டி, பனாகொட ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் எனவும், இதில் ஒருவர் அரச சேவையில் இருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் பல இடங்களில் இவ்வாறான வாகனங்களை எடுத்து சென்று விற்பனை செய்யும் இவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்படி வாகனங்களின் உரிமையாளர்கள் ஹட்டன் பொலிஸுக்கு வருகை தந்ததோடு அவர்களில் சிலர் இவர்களை அடையாளம் காண்பித்துள்ளார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த 5 பேரையும் நாளை (15) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)