கல்முனை மாநகர சபையில் உறுப்பினரும் மதுப் பிரியருமான பெஸ்டர் றியாசுடன் இணைந்து கொண்டு கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் என்ற நாமத்தோடு மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தி வந்த மாநகர சபை தோட்டக்காவலர் கண்ணன் பாருக் மாநகர சபை முதல்வரினால் துரத்தப்பட்டுள்ளார் .
கண்ணன் பாருக் என்பவர் ஹரீஸ் மேயராக இருந்தபோது வசர் திட்டத்தில் நீர் வழங்குவதில் ஏழைகளிடம் கொள்ளையிட்டவர் ரியாசுடன் இணைந்து இருவருமாக ஹரீசுக்கு தெரியாமல் செய்த கொள்ளைகள் தெரியவந்ததும் ஹரீசால் துரத்தப்பட்டவர் . அவர் மீண்டும் அதாவுல்லாவின் வாலைப் பிடித்து அவருடன் சிறிது காலம் ஒட்டியிருந்தவர் மீண்டும் நிசாம் காரியப்பர் மேயரானதும் அவரது வீட்டு வேலைக்காரனானார் .
இந்த கண்ணன் பாருக்கை நிசாம் காரியப்பர் அவரது எடு பிடியாக வைத்திருந்தார் . அவரே அவருக்கு முதல்வரின் செயலாளர் எனவும் நாமம் சூட்டிக் கொண்டு கல்முனை மாநகர சபைக்குள் தன்னால் முடியுமான அத்தனை அட்டகாசங்களையும் மதுப் பிரியன் ரியாசுடன் இணைந்து அரங்கேற்றினார் .
கல்முனை மாநகர சபையில் பணி செய்கின்ற சுகாதார தொழிலாளி தொடக்கம் அதிகாரி வரையிலான குறிப்பாக தமிழர்களை வாட்டி வதைத்தவர் . இறுதியாக நடந்த நிருவாக அதிகாரி புலேந்திரனை ரியாஸ் தாக்கியதும் இவரது தூண்டுதலே . இவரது நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கண்டித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை . இவர் முதல்வரின் எடுபிடி என்பதற்கு மேலாக மாநகர சபையில் கடமை புரிகின்ற தோட்டக் காவலாளியாவார் . இவர் அங்குள்ள உயர் அதிகாரிகளான நிருவாக உத்தியோகத்தர் ,கணக்காளர்,பொறியியலாளர் போன்றவர்களை கட்டளையிடும் அளவுக்கு அதிகாரம் செலுத்தி வந்தார்.
தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி விடயத்தில் குறிப்பாக மின்குமிழ் பொருத்துதல் ,குப்பை அகற்றுதல் போன்ற விடயங்களில் இவரது தான்தோன்றி தனமான புறக்கணிப்புக்கள் மாதாந்த கூட்டங்களில் தமிழ் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தன.
எதுவும் பலிக்காத நிலையில் சமீபத்தில் தாக்கப்பட்ட நிருவாக அதிகாரி புலேந்திரன் விடயத்தை மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்தனர் . ஹக்கீமிடம் இந்த கண்ணன் பாருக்கின் விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் காரசாரமாக எடுத்து வைத்தனர் . அந்த நிமிடமே ரவூப் ஹக்கீம் நிசாம் காரியப்பருக்கு உங்களின் செயலாளர் கண்ணன் பாருக்கை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டார் . இதன் பின்னர் அவரது அடாவடி நடவடிக்கைகள் குறைந்து காணப்பட்டது .
எனினும் மழை ஓய்ந்தாலும் தூவானம் நின்ற பாடில்லை என்பது போல் மீண்டும் நிருவாகதுக்குள் மூக்கு நுழைக்கும் வேலையே செய்தார் . இதனை கேள்விப் பட்ட முதல்வர் அண்மையில் நடை பெற்ற நிதி குழுக் கூட்டத்தில் அதனை உறுப்பினர்களும் இருக்கத்தக்கதாக கெட் அவுட் என்று துரத்தியுள்ளார்.