![]()
மாத்தளை,எலஹேர பிரதேசத்தில் எலஹேர பக்கமுன ஹீரடியே புண்ணியவர்தன விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பாதணி ஜோடி,சிகரெட் மற்றும் மதுபான போத்தலொன்று விஹாரை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.