![](http://3.bp.blogspot.com/-FymSE0yT5SU/U7zMr74V8EI/AAAAAAAAYmo/xtcyAPafwzo/s320/inquiry.jpg)
அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு ஆசிரியயை அனுப்பிய சம்பம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
குருணாகல் நகர சபை தலைவரின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியை ஒருவரை, மன்னிப்பு கேட்பதற்காகவே குருணாகல் நகரசபை தலைவரின் வீட்டிற்கு ஆசிரியையை வற்புறுத்தி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.