Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

மரணத்தில் சந்தேகம்! மருத்துவ பீட மாணவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது! மட்டக்களப்பில் சம்பவம்!!

$
0
0
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி உயிரிழந்த மருத்துவ பீட மாணவியான 22 வயதான கெங்காதரன் மாதுமையின் சடலம் மருத்துவ பரிசோதனை களுக்கான தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனதெரி வித்த முறைப்படையடுத்து குறித்த மருத்துவ பீட மாண வியின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு களுவாஞ் சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டார் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி 22 வயதான கெங்காதரன் மாதுமை பெரியப்பாவால், என்ற மாணவி உயிரிழந்தார். இம்மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கல்லடியைச் சேர்ந்த மேற்படி மாணவி, மகிளூரில் வித்தியாலயமொன்றில் ஆரம்பக் கல்வியை கற்றதன் பின்னர், மருத்துவ பீடத்துக்காக களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி பல்கலைக்கழக பதிவை முடித்து 18ஆம் திகதி அதற்கான பயிற்சியை முடித்துக்கொண்டு கல்லடியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அம்மமாணவி ஆரம்பக் கல்வியைக் கற்ற பாடசாலையின் அதிபர், அம்மாணவியைத் தொடர்புகொண்டு பாடசாலையின் எழுத்துவேலை மற்றும் மொழிப்பெயர்பு செய்வதற்கு வந்து உதவுமாறு கோரியுள்ளார். இந்நிலையில் அம்மாணவி தனது தாய், பாட்டி மற்றும் சகோதரிகளுடன் பெப்ரவரி 21ஆம் திகதி மகிளூருக்கு சென்று தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியுள்ளார்.

குறித்த மாணவியின் சகோதரிக்கு பிரத்தியேக வகுப்பு இருந்துள்ளதால், சகோதரியை அழைத்துக்கொண்டு மாணவியின் தாயாரும் பாட்டியும் கடந்த 24ஆம் திகதி கல்லடிக்குச் சென்றுள்ளனர். 25, 26ஆம் திகதிகளில் பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை வேலைகளுக்கு உதவியுள்ள மாணவி, 26ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு நித்திரைக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் 27ஆம் திகதி காலை சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.

பாம்பு தீண்டியதாலேயே குறித்த மாணவி உயிரிழந்தார் என்று சட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் சலடம் மகிளூர் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, சம்பவத்தில் உயிரிழந்த மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது சகோதரியின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. அவர் தற்போது தலைமறைவாகியும் உள்ளார். அவரே, தனது மகளை கொலை செய்துள்ளார் என்றும் மாணவியின் தாயார் செய்துள்ள பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், மாணவியின் சடலத்தைத் தோண்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத் தக்கது


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>