![](http://1.bp.blogspot.com/-qiqg7hoZO2s/U-GwFfX2NpI/AAAAAAAACF8/U5UfKExPgb8/s320/Teacher+1.jpg)
கடிதத்தை அனுப்புபவர் ஆனந்த சரத் குமார எனவும் ´உனது சாட்சியாளரை நான் கொன்றேன். நீ பாதுகாப்பாக இரு´ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டதாகவும், ஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யவில்லை எனின் ´நான் ஆனந்த சரத் குமார இல்லை´ எனவும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஆசிரியயை கூறினார். தனது மகளுக்கு அறிவுரை வழங்கியதற்காக ஆனந்த சரத் குமார, குறித்த ஆசிரியை பாடசாலையில் முழந் தாளிடச் செய்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப் படையில் ஆனந்த சரத் குமார கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த வழக்கின் சாட்சியாளர் ஒருவர் அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![](http://2.bp.blogspot.com/-XA5Dwam1VR8/U-GwSYC-5ZI/AAAAAAAACGE/UHyqfWjhVL0/s320/Teacher+1.jpg)
![](http://3.bp.blogspot.com/-diFljO3tVHo/U-GwTdgaTvI/AAAAAAAACGM/kOonr6bCS20/s320/Teacher+2.jpg)