Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இலங்கையுடனான உறவு பற்றி மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்! தமிழ்நாட்டு தீவிர கட்சிகள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது!

$
0
0
தமிழ்நாட்டில் தீவிர தமிழ் கட்சிகளுக்கு, அந்நாட்டு மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, வழங்கிய செவ்வியிலேயே, இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

தமிழ்நாட்டின் தமிழ் தீவிரவாத கட்சிகள், கடந்த தேர்தலின்போது படுதோல்வி யடைந்தன. ஜெயலலிதாவை எடுத்துக்கொண்டால், அவர் பிராஹ்மனனுக்கு விரோதமான கட்சிக்கு தலைமை தாங்குகின்றார். எனினும் அவர், பிராஹ்மன குலத்தை சேர்ந்த ஒரு பெண். இதனால் அவர்களது கருத்துகளுக்கு ஏற்பவே, அவர் செயற்பட வேண்டியுள்ளார்.

இந்திய-இலங்கை உறவுகளில் அழுத்தங்களை மேற்கொள்வதற்கு, அவர்களால் முடியாது. இந்திய பிரதமரும், இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உறவுகளில் இந்திய அரசாங்கம் ஒரு தேசிய கொள்கையையே பின்பற்றுகின்றது. இலங்கையில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இன்று ஏனைய ஆசிய நாடுகளை நோக்கும்போது, தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. கல்வித்தரம் அதி உயர் நிலையில் காணப்படுகின்றது.

பயங்கரவாதம் காரணமாக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கென இருந்த கால அவகாசம் இழக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையை தற்போது கட்டியெழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை இம்முறை பாதுகாப்பு மாநாட்டின் மூலம் கண்டுகொள்ள முடிந்தது. இலங்கையில் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை காண முடிகின்றது. ஐரோப்பிய சந்தையை மீறி செல்வதற்கு, ஜப்பான், இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளால் முடிந்துள்ளது.

இலங்iயிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை தொடர்பாக, உலகில் ஒரு அதிருப்தி நிலை காணப்படுகிறது. இலங்கை எட்டியுள்ள புகழுக்கு பங்கம் விளைவிப்பதே, அவர்களது நோக்கமாகும். இலங்கை யுத்த வெற்றிகள் மூலம், பெற்றுக்கொண்ட அனுபவங்கள், தமது நாடுகளின் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்கு பயன்படுத்துமாறு கூற தயங்குவது, இதன் காரணத்தினலாகும்.

பல பயங்கரவாத குழுக்கள், பலசாளி நாடுகளின் உதவிகளை பெற்று வருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக கூறுவதற்கு தேவைப்படுவதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தவித அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் அதில் இருப்பதுவே, இதற்கான காரணமாகும் என தெரிவித்துள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!