![](http://3.bp.blogspot.com/-IabyeKszw1g/VOOWY_5_syI/AAAAAAAAor4/HvvttR8Fm1s/s320/s.fonseka.jpg)
அவை வருமாறு..
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க - இராணுவ செயலாளர் , பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலான – திட்ட பணிப்பாளர் , பிரிகேடியர் அருண பெரேரா – அலுவலக சபை பணிப்பாளர் நாயகம் , மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன – யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல்
இந்த அனைத்து நியமனங்களையும் ஜனாதிபதி செயலாளர் பிபி.அபேகோன் 16ம் திகதி இராணுவ தளபதிக்கு விசேட உத்தரவாக அனுப்பி வைத்துள்ளார். இந்த நியமனத்தின் விசேடம் என்னவென்றால் இது குறித்து பிரதமருக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்த நியமனத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளதாக எமக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த நியமனங்களை அடுத்து இலங்கை இராணுவத்தில் பாரிய குழப்பகர நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.