![](http://4.bp.blogspot.com/-fR7HeXvafIc/UrhET6QjESI/AAAAAAAAWS0/vy9i943ZpZw/s320/Gunadasa.jpg)
நாட்டில் 70 வீதத்திற்கும் மேல் சிங்கள பௌத்தர்கள் உள்ள னர். 7 வீதத்திற்கும் குறைவான கத்தோலிக்கர்களை கொண்ட இவர்களுக்கு எப்படி இப்படியான அழுத்தங்களை கொடுக்க முடிந்துள்ளது என கேள்வியெழுப்பிய குண தாச அமரசேகர, இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் எமக்கு சுதந்திரத்தை வழங்கும் போது, துஷட்மான நாடாளுமன்ற முறையையும், பிரித்து வேறுப்படு த்தும் அரசியல் கட்சி முறைமையையும் விட்டுச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளால் தான் 70 வீதமான பௌத்த சிங்களவர்கள் பிரித்து வேறாக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த பிரித்து வேறுப்படுத்தும் முறை காரணமாக தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித் துள்ளார்