![](http://3.bp.blogspot.com/-Lt_4m9KNa5I/W83PLWjvIfI/AAAAAAAAsiM/_KSyskPHYkI93mFddwGn4PWxXo3n5Q4rACLcBGAs/s200/44529183_279824942652304_2381563617649623040_n.jpg)
யாழ்பாணத்தில் நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் விக்னேஸ்வரன் - சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு பேசிய விக்னேஸ்வரன், தப்பி சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என்று நம்புவதாகதெரிவித்துள்ளார்.
இதேநேரம் கொழும்பிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் சிவாஜிலிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விக்னேஸ்வரன்.
![](http://4.bp.blogspot.com/-lit480stmkM/W83rjNdD35I/AAAAAAAAsi4/d0eOSrjWeqEbTSJ0V9a_CnKVQsogAgiRQCLcBGAs/s640/44559387_315082435890195_2699523662934966272_n.jpg)
ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ரெலோ த.தே.கூ வை விட்டு வெளியேறி விக்கி-கூட்டுடன் இணையும் என்று பேசப்பட்டபோதிலும் அது நிறைவேறவில்லை. இந்நிலையிலேயே சிவாஜிலிங்கத்தை உடைத்து ரெலோவை கூறுபோடுவதற்கான வேலைத்திட்டம் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.