![](http://1.bp.blogspot.com/-wF9REkhDNUw/W-cvMYbntCI/AAAAAAAAs8o/IPchtaxpOzcTgPEKQbiEVC-X2TW_L4jsgCLcBGAs/s200/susil%2BPrema%2BJeyantha.jpg)
இந்த நிதி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்அளித்தார்.
இதன்போது நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவுக்கான நிதி குறித்து விளக்கம் அளிக்கையில், ஜனவரி மாதத்திற்கான தேவையான நிதியை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்யவார். கையிருப்பிலுள்ள நிதியில் இருந்து இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு உள்ள யாப்பு ரீதியாக உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி ஒதுக்கீட்டுகான நடவடிக்கையை மேற்கொள்வார்
அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி இருப்பில் உள்ள நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.