Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை. தயான் ஜெயதிலக

$
0
0
உலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க கூறினார்.

உலகின் சில தலைநகரங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் சில கொள்கை பிரசாரங்களையிட்டு இலங்கை மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“உலகின் சில பகுதிகளில் உள்ள எமது நண்பர்களிடம் இருந்து கேட்கும் குரல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாகஇல்லை. ஏனெனில் உலகின் சில தலைநகரங்களில் இருந்து வரும் கொள்கை பிரசாரங்களாக அமைந்துள்ளன. ஒருசிலர் உண்மையிலேயே ஊடக மாநாடுகளை நடத்துகின்றனர். அவை பல மைல் தூரம் கடல்களுக்கு அப்பால் நடப்பவை. அவை என்ன சொல்கின்றன. எமது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்று சொல்பவையாக அவை உள்ளன என்று அவர் கூறினார்.

“ஆனால் நாம் என்ன செய்யவேண்டும் என்று எமது ஜனாதிபதிக்கு கூறும் நாட்டில் வசிக்கிறோம். எனவே எமது ஜனாதிபதி எங்கள் நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவோர் சொல்வது எமக்கு வியப்பைத் தரவில்லை. அவ்வாறு சொல்பவை ஒரே குரல்களாகவே உள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் நண்பர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்படவேண்டும் என்று கூறுகின்றனர். நாட்டின் அதிஉயர் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அவர் முழு நாட்டுக்கும் ஜனாதிபதியாக தெரிவானவர். அத்துடன் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்றே அவர் அந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இன்று நடப்பது என்ன என்று புரிந்துகொள்வது கஷ்டமானது அல்ல. உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்தும் 1990 இல் இருந்து உலகத்தின் அனுபவம் மூலமாகவும் அதனை தெரிந்துகொள்ள முடியும். ரஷ்யாவில் 1990ல் இருந்த நிலை பற்றி அனுபவத்தில் இருந்து பார்க்குமிடத்து அங்கு ரஷ்யா ஒரு குறிப்பிட்ட திசையில் சென்றுகொண்டிருந்ததை உணரலாம். ஆனால் அப்போதுமக்கள் அந்த திசையை மாற்றி தேசிய மற்றும் ரஷ்ய மாநிலங்களுக்கு சரியான பாதை எது என்ற பாதைக்கு மாறினர்.


“அவ்வாறான ஒரு அனுபவத்தையே நாங்கள் இப்போது கடந்து செல்கிறோம். அத்துடன் அது இப்போது அரசியல் சிக்கலாகவும் அரசியல் பதற்ற நிலையிலும் உள்ளது. இரு தரப்பினருக்கு இடையிலான இந்த அரசியல் போராட்டம் 1990 ல் 21 ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீங்கள் அனுபவித்ததை போன்றதாகும்.

ஒருசிலரின் முயற்சிகளின் பங்களிப்பையே இலங்கையில் இன்று காண்கிறோம். இது நிறப் புரட்சி மற்றும் அரேபிய புரட்சி எப்படியிருந்தது என்பதை ஞாபகமூட்டுவதாக உள்ளது.

எங்கள் ஜனாதிபதி கடந்த வருடம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார். அத்துடன் ஜனாதிபதி புட்டீனுடன் வெற்றிகரமான சந்திப்பையும் மேற்கொண்டார். இந்த நிலையில் நாம் எமது நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று ரஷ்யா இப்போது எதுவும் சொல்லாததையிட்டு நான் ரஷ்யாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ரஷ்யா எப்போதும் எம்மை மதித்துவந்துள்ளது. எமது தேசிய சுதந்திரத்தை பாதுகாக்க உதவியும் தந்துள்ளது. எமது தேசிய இறைமை மற்றும் ஒருமைப்பாட்டு மற்றும் எமது ஒற்றுமையை பாதுகாக்க உதவியுள்ளது.

ரஷ்யாவின் இவ்வாறான பங்களிப்பை 1917 நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னரே இலங்கையர்களான நாம் அங்கீகரித்திருந்தோம்.

ரஷ்யாவும் செம்படையும் நாம் சுதந்திரம் பெற உதவியதை மறுப்பதற்கில்லை என்று அவர் மேலும் கூறினார்.

நன்றி தினகரன்


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!