![]()
ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிகா சிறிசேன, மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தனியானதோர் கூட்டு அமைக்க முயன்றுள்ள இத்தருணத்தில் சிறிலங்காக சுதந்திரக் கட்சி பாரிய தோல்வியை தழுவும் என அவரது ஆலோசகர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
மைத்திரிபாலவின் அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டுள்ள நிலையில்,
பொதுஜன பெரமுனவில் இணைந்து பொலநறுவையில் தேர்தலில் குதிப்பதன் ஊடாக தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.