![](http://2.bp.blogspot.com/-pdjc-4OlyaA/W-g1gST6kcI/AAAAAAAAs9o/YoI0J_ZA-1ItEIw9HLWM04zcOQVSyQ10gCLcBGAs/s200/vickneshwaran.jpg)
இவர்கள் இத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக அறியமுடிகின்றது. ஈபிஆர்எல்எப் இல் போட்டியிடலாம் என சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்மொழிந்தபோதும்அதற்கு விக்கியின் சகாக்கள் இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளனர். இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பான அக்கட்சியின் சின்னத்தில் மக்கள் மத்திக்கு செல்லமுடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டத்திலிருந்து இக்குழு சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் ஆகியோர் களமிறங்குவதென நேற்றிரவு முதற்கட்டமாக முடிவாகியுள்ளதுடன் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் பணியையும் ஆரம்பித்துள்ளனர் என அறியமுடிகின்றது.