![](http://1.bp.blogspot.com/-wGTYjM3ovdo/W-sr1ZJMT5I/AAAAAAAAtAs/gi_KuUIVtXYhvhfPIxvzbOkIRqdwAweAwCLcBGAs/s200/Sajith%2Band%2Bchampika.jpg)
அத்துடன் அதற்கான மாற்றுத் தலைமையாக சஜித் பிறேமதாஸவை கட்சியின் சிலர் மும்மொழிவதுடன் எதிர்வரும் தேர்தலில் சஜித் பிறேமதாஸவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும்எனவும் அவர்கள் கோருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதை விட பலமிக்க மக்கள் கூட்டமைப்பா உருவாக்குவதே இன்றைய தேவையாகும் என்றும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு தேர்தல் களத்தில் நாம் செயற்படுதல் வேண்டும் என்றும் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
கொழும்பில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி அவரின் கருத்தானது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவதிற்கான காய் நகர்தலில் சம்பிக ரணவக, ராஜித சேனாரத்ன ஆகியோர் ஈடுபட்டுள்ளதை ஊர்ஜிதம் செய்வதாக கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,