அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றது. அச் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர், இரா.சம்பந்தன் ஐயாவையும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஜனாதிபதி தனிப்பட்ட ரீPதியில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே இச் சந்திப்பில் கலந்து கொள்ளுவீர்களா? என கேட்ட போது, இரா.சம்பந்தன் அவர்கள் இது தனிப்பட்ட விடயம் இல்லை. கூட்டமைப்புடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் அதற்கு மாறாக எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவருடைய தற்போதைய சாரதியான சுமந்திரனுடன் சென்று ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை செய்துள்ளார். என்ன விடயம் கதைக்கனப்பட்டது என தெளிவாக தெரிவிக்கப்படாத போதும், இவர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளதாகவும் இதன்படி அடிக்கடி ஜனாதிபதியை சந்திக்க வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.