![]()
எதிர்வரும் 19ஆம் திகதி வடமாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, யாழ்.நகரின் மத்தியில் புதிதாக நிர்மானி க்கப்பட்டுள்ள கார்கில்ஸ் நிறுவனக் கட்டடத் தொகுதியியை திறந்து வைக்கவுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனத் தெரியவந்திருக்கின்றது.
இது மட்டுமல்லாது இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடவுள்ளதுடன், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.