![]()
எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் வேலை திட்டங்களை இப்பொழு திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அல்லாது போனால் 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்ட நிபுணர் டாக்டர் சிசிர லியனகே இத்திடுக்கிடும் தகவலைத் காலியில் வைத்து தெரிவித்தார்.
காலி வைத்தியசாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்குபற்றிய செய்தியாளர்கள் சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் எச்.ஐ.வி தொற்றியவர்களுள் கடந்த 25 வருட காலங்களில் 1808 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.