![]()
அபிரிகாவின் டைகர் ஃபிஷ் (Tigerfish) ரக மீனினம் இரை தேடி பறந்து சென்ற பறவை ஒன்றை விழுங்கிய காட்சி ஆய்வாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது ஆச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது இந்தவகை மீன்கள் பறவைகளை விழுங்கும் என ஏற்கனவே கண்டறியப்பட்ட போதிலும் பறந்து செல்லும் பறவையை பாய்ந்து விழுங்கும் என கண்டறியப்பட்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத் தக்கது.
டைகர் ஃபிஷ் வகை மீன்கள் அவற்றின் கூரிய பற்களுக்கு பிரசித்தி பெற்றவை இந்த நிலையில் தென்னாபிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள வாவி ஒன்றில் பறந்து செல்லும் மீனை விழுங்கிய காட்சி தென்னாபிரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வாளர்களால் வாவியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கமறாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.