வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக யாழ் சோமசுந்தர அவனியு வீதியில் இன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்து வைத்த வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது மாகாண அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும்ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.