நாடாளாவியரீதியாக நடைபெறுகின்ற சிற்றூழியர்களின் போராட்டத்தில் யாழ் போதனா வைத்திய சாலையின் சிற்றூழியர்களுக்கு குரல் கொடுக்கும் முகமாக இன்று காலை ஏழு மணிமுதல் மதியம் பண்ணிரண்டு மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டதால் வைத்திய சாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சிற்றூழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து அரசு வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாதமையினால் சிற்றூழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.