யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் நாளை(17.01.2013) வெள்ளிக்கிழமை முதல் மூன்று நர்ட்களுக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
நாளை 17,18,19 ஆகிய மூன்று நாட்களும் நடைபெறவுள்ளஇக்கண்காட்சியின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன் இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக் கண்காட்சியில் வேறுபட்ட தேவைகள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிற்பாட்டாளர்களின் 250 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இந்த வர்த்தகச் சந்தையில் நடைபெற்றுள்ளது.
இம்முறையும் உணவு, விவசாயம், இலத்திரனியல், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், மோட்டார் சைக்கிள்கள், சுகாதாரப் பாமரிப்பு, காப்புறுதி மற்றும் பல பொருட்கள் மற்றும் பல சேவைகள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் கண்காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் விசேடமாக கல்விக் காட்சி கூடடம், குடாநாட்டைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட கண்காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.