மனித உரிமை விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள துணைப் பேச்சாளர் மேரி ஹார்ப் வளங்கியுள்ளதுடன் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கம் சகல தரப்பினருடனும் இணைந்து பேசி நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.