ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த அமர்வுகளை மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் எந்தவொரு நாட்டினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதனை தெரிந்து கொண்டே அரசாங்கம் இவ்வாறு வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ரோமப் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் எந்தவொரு நாட்டினாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை;ப பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறியடிக்கக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கும் ஆளுமை இலங்கை ராஜதந்திரிகளுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான ராஜதந்திரிகள் அரசியல் ரீதியான பின்புலத்தின் அடி;பபடையில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும், இதனால் அவர்களுக்கு கள நிலவரங்களோ ராஜதந்திர உத்தியோ தெரிந்திருக்க நியாயமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் வலுப்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.