காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது 29 வயதான காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்துவைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற 32 வயதான நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்ததால் அந்த இளைஞன், அவனின் காதலியை கத்திமுனையில் மிரட்டி நூற்றுக்கணக்கானோர் பாரத்துக்கொண்டிருந்தவேளை கட்டடமொன்றின் கூரைமேல் நிற்கவைது தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதுடன் தனது காதலியையும் ஆடைகளைக் களையுமாறு உத்தரவிட்ட நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.