எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அமெரிக்க பல்கலை மாணவன் ஒருவன் அறிந்துகொண்டே 32 பேருடன் உடலுறவுகொண்டு உயிரைக்குடிக்கும் எச்.ஐ.வி. தொற்றினை பரப்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் மைக்கேல் ஜோன்ஸன் என்ற 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவன் சமூக வலைத்தளங்களில் சந்தித்த 32 பேருடன் கடந்த ஒக்டோபர் மாதத்தில் லின்டன்வூட் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பற்ற முறையில் உடறவுகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த மடிக்கணனியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச்சம்பவம் ஜோன்ஸனுடன் உடலுறவுகொண்டதனையடுத்து தனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக ஆணொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 5 மாத விசாரணைகளின் பின்னர் ஜோன்ஸனுக்கு எதிராக த சென்.சார்லஸ் பொலிஸ் திணைக்களத்தினால் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.