சனல் 4 அலைவரிசை தீர்க்கமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கையை விமர்சித்து வருவதாகவும், ஆனால் அரசா ங்கம் அதற்கு சிறந்த பதிலடி கொடுத்ததாகவும், அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன் யுத்தத்தினால் அடைந்து கொள்ள முடியாதவற்றை வேறு மார்க்கங்களில் அடைவதற்கு பல்வேறு சக்திகள் முயற்சிக்கின்றன எனவும் இலங்கைக்கு முக்கியத்துவமான சில விடயங்கள் நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே இதுபோன்ற பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை நாடுவது, பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இதனை வினைத்திறனுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென ஆராய்வதே, முக்கியமாகும். நீதிமன்றத்திற்கு செல்வதால், பல வருடங்களுக்கு இப்பிரச்சினை இழுபட்டுச்செல்லும். நீங்கள் எம் சார்பில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் தனது கடமையை செய்ய தயார். பிரச்சினை அதுவல்ல. பிரிந்து நின்று செயற்படாமல், இதனை தேசிய பிரச்சினையாக கருதி, நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்திய இராஜதந்திரி தேவயாணி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது அவை போலியானது என தெரிவித்தது. ஆனால் சனல் 4 அலைவரிசை இலங்கை தொடர்பான படங்களை வெளியிட்டபோது, அமெரிக்கா முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண் டது. இது அமெரிக்காவின் நிலைப்பாட்டை உலகறியச் செய்தது.