பேஸ்புக் ஒன்றில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக நிற்பது போன்று தன்னுடைய புகைப்படம் தரவேற்றப்பட்டதனால் குருநாகலையில் தரம் 11 இல் கல்விப்பயிலும் 16 வயது பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அந்த புபைப்படத்தில் இருக்கின்ற ஆண், மாணவியின் காதலன் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் வந்ததை பார்த்த மாணவியின் பாடசாலை அதிபர் மாணவியை அழைத்து எச்சரித்ததுடன் மறுநாள் பெற்றோரையும் அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
நடந்த சம்பவம் தொடர்பில் வீட்டாருக்கு தெரியப்படுத்துவதால் வீட்டில் தனக்கு அடிப்பார்கள். ஏசுவார்கள் எனக் கருதிய குறித்த மாணவி வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
விதுசா என்ற 16 வயது மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். அவரது உடல் குருநாகல் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு தற்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை குருநாகல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.