வெல்லவாய, பெல்வத்த பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் நூலகர் பதவி வெற்றிடத்துக்கு நியமனம் வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் ஒருபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான் ஜனிதா ரோஷனி, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் நூலகத்தில் நூலகர் சேவைக்கான பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பித்த பெண்ணொருவரிடமே அப்பாடசாலையின் அதிபர் பாலியல் இலஞ்சம் கோரியது தொடர்பில் குறித்த பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்ட அதிபரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.