ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கும் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவ சபையுடன் நேற்று (06.02.2014) நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குடிபோதையில் குழப்பம் விளைவித்தமையால் பாலித தெவரப்பெரும மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.