அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில், பல ஆண்டுகளாக இலங்கையில் உபயோகப்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்தி வந்த கொழும்பு ஹெட்டிவீதி பிரபல தங்க வியாபாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது, இந்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்திய 11 தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கையும்மெய்யுமாகப் பிடிபட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
(கேஎப்)