தனக்கு ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிப் பதவியைத் தந்தால் மட்டுமே தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்டப் பா.உ. பாலித்த தெவரப்பெரும குறிப்பிடுகிறார்.
எவ்வகையான பிரச்சினைகள், பிளவுகள் கட்சியினுள் ஏற்பட்டபோதும், எக்காரணத்துக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என பா.உ. குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கான உறுப்புரிமை இடைநிறுத்தி வைக்கப்பட்டதற்கான எவ்வித சட்ட ரீதியான அறிவித்தல்களும் தனக்கு வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த.
(கேஎப்)